சென்னை: சென்னை தாம்பரம் கேம்ப்ரோடு பகுதியில் பி.டி.ஓ அரிகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலையூரில் இருந்து வேளச்சேரி நோக்கி கார், ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை மடக்கி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இன்றி ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், துணை தாசில்தார் ராதாவிடம் ஒப்படைத்தனர்.
இதையுன் படிங்க: மீண்டும் அவரே வேண்டும்...’; ஆதரவாளர்கள் சாலை மறியல்!