ETV Bharat / state

இடைத்தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு - சத்யபிரத சாகு - இறுதிக்கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு பெறுவதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

sathyapratha sahoo
author img

By

Published : Oct 18, 2019, 6:43 PM IST

Updated : Oct 18, 2019, 7:01 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அரசியல் தலைவர்களின் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று நாங்குநேரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் நாராயணன் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் ராஜ நாராயணன் உட்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது. வெளி நபர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசுகையில், இன்று மாலைக்குள் இரண்டு தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி முடிவடைகிறது. நாங்குநேரி தொகுதியில் 2.57 லட்சம் வாக்காளர்களில் 2.18 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 2.23 லட்சம் வாக்காளர்களில், 2.18 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடமிருந்து இன்னும் அறிக்கை வரவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இடைத்தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் நேரலை செய்யப்படும். நாங்குநேரியில் 110 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காவலர் மீது புகார் கொடுக்கவந்தவர்களைத் தாக்கிய துணை கண்காணிப்பாளர்!

Intro:Body:தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு. வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என சாகு கூறினார்.

இன்றைக்குள் இரண்டு தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி முடிவடையும்.

நான்குனேரி - 2.57 லட்சம் வாக்காளர்களில் 2.18 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி - 2.23 லட்சம் வாக்காளர்களில் 2.18 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் பணம் பட்டுவாடா தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்கபட்டுள்ளது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடமிருந்து இன்னும் அறிக்கை வரவில்லை எனவும் சாகு கூறினார். விக்கிரவாண்டியில் 275, நாங்குநேரியில் 299 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இடைத்தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குக்களும் நேரலை செய்யப்படும். நாங்குநேரியில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 110 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 18, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 32 என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.Conclusion:
Last Updated : Oct 18, 2019, 7:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.