தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த மூன்று வருடமாக நடத்தப்படவில்லை. உள்ளாட்சி வேலைகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலை தயாரித்து அனுப்ப மாநில தேர்தல் ஆணையம்,தேர்தல் சிறப்பு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட /அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குச் சின்னம் பதிவு செய்தல் மற்றும் ஒதுக்கீடு செய்தல் தொடர்பான வழிமுறைகளை குறிப்பிட்டு அரசாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேட்டு மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு