ETV Bharat / state

சென்னை விமான நிலையம் அருகே முதியவர் மர்மமான முறையில் மரணம் - சென்னை விமான நிலையத்தில் முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை: விமான நிலையத்தின் சர்வதேச முனையம் வருகை பகுதி அருகே மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

death
death
author img

By

Published : Feb 11, 2021, 3:44 PM IST

சென்னை விமான நிலையம் சர்வதேச முனையத்தின் வருகை பதிவு அருகே வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதி உள்ளது. அப்பகுதியில் இன்று (காலை) 50 வயது நிறைந்த முதியவர் ஒருவர் உறங்குவது போல் படுத்து கிடந்துள்ளார். காலை 9 மணி ஆகியும் எழும்பாததால் சந்தேகமடைந்த கார் ஓட்டுநர்கள், அவரை எழுப்ப முயற்சித்தனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் எழவில்லை.

அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து கார் ஓட்டுநர்கள் சிலர் விமான நிலைய காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவலளித்தனர். மருத்துவர்கள் வந்து பாா்த்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இறந்தவரின் உடலை மீட்ட காவல் துறை உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இறந்தவரின் உடலில் காயம் ஏதும் இல்லை. மாரடைப்பில் இறந்தாரா? அல்லது விஷமருந்தி தற்கொலையா என்பதும் தெரியவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவில் தலைவர் முதல் தொண்டர்வரை பொய்தான் - முதலமைச்சர் குற்றச்சாட்டு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.