புதுச்சேரியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் வரை செல்லும் ரயிலில் அரிசி கடத்திச்செல்வதாக ரயில்வே உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உதவி மைய ஊழியர்கள் சென்னை எழும்பூர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் எழும்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரயிலின் பொதுப்பெட்டியில் சோதனை செய்தபோது 675 கிலோ அரிசி கடத்திக்கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர், அரிசியை கடத்திவந்த அடையாளம் தெரியாத நபரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி சிவில் சப்ளை சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க: கோயில் அருகில் குப்பைக்கிடங்கு: பசுமைத் தீர்ப்பாயம் அறிவிக்கை