ETV Bharat / state

பெற்றோர்கள் பயப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் - அன்பில் மகேஷ்

author img

By

Published : Aug 31, 2021, 11:29 AM IST

பெற்றோர்கள் அச்சப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமை என  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது. நாளை முதல் 9,10,11,12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கவுள்ளது.

மாஸ்க் வழங்க ஏற்பாடு

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும்; மாணவர்கள் மாஸ்க் அணிந்து வருவதற்கு மறந்த விட்டாலோ அல்லது மாஸ்க் சரியாக இல்லாவிட்டாலோ அதற்கு பதில் வேறு மாஸ்க் வழங்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க மாஸ்க், சானிடைசர் வழங்கியுள்ளார்.

லேடி வெலிங்டன் பள்ளியில் அன்பில் மகேஷ் ஆய்வு

ஒரு நாளில் ஐந்து வகுப்புகள் மட்டுமே

அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்வந்து மாணவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு கழிவறையிலும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் அமர வைக்க வேண்டும் . ஒரு நாளில் ஐந்து வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். பள்ளிகளில் தற்போதைக்கு விளையாட்டு நேரம் கிடையாது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

பெற்றோர்கள் - மாணவர்கள் அச்சம் வேண்டாம்

காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து வகையிலும் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் அச்சப்படாமல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை.

மாணவர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 1 முதல் 8ஆம் வகுப்புவரை பள்ளிகள் இயங்கவில்லை.

கல்வி தொலைக்காட்சியில் தொடர்ந்து வகுப்புகள்

எனவே அந்த வகுப்பறைகளை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்தலாம். கல்வி தொலைக்காட்சியில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முகாமில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

அதனடிப்படையில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர்.தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிஇ, பிடெக் படிப்பில் சேர 22,671 அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.