ETV Bharat / state

மாநிலத்திற்கான தனிக்கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு!

author img

By

Published : Aug 14, 2021, 1:13 AM IST

மாநிலத்திற்கான தனிக்கல்விக் கொள்கை தயாரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது தெரிவிக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாநிலத்திற்கான தனிக்கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு!
மாநிலத்திற்கான தனிக்கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு!

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளி, உயர் கல்வித்துறைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியாளர் ஜெயபிராகாஷ் காந்தி பேசும் காணொலி

எதிர்பார்த்ததை விட, கூடுதல் நிதி!

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிராகாஷ் காந்தி பேசுகையில், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளி, உயர் கல்வித்துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையை விளக்கும் வகையில், வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர், பள்ளி உயர் கல்வித்துறைகளுக்கு எதிர்பார்த்தை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைவிட நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பினும் உயர் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தமிழ் சித்த மருத்துவத்திற்காக ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவில் விண்ணப்பம் வந்தால், இந்த ஆண்டு மேலும் புதியதாக 10 கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் ஆளில்லா விமானத்துறை ஆரம்பிப்பது வரவேற்க கூடியது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 32 ஆயிரத்து 599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.20 கோடியில் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் திட்டமும் அடங்கும்.

தனிக்கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

மாநிலத்திற்கு என தனிக்கல்விக் கொள்கை தயாரிக்கப்படும் என்பது வரவேற்கப்பட வேண்டியது. இதனை கிராமப்புற, நகர்புற மாணவர்கள் பயனடையும் வகையில் வடிவமைத்தால், தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயரும். உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையில் இருந்து, எதிர்கால வேலை வாய்ப்பினை நோக்கி அரசுப் பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பை உயரத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பட்ஜெட்டில் மருத்துவம், குடும்ப நலத்துறைக்கான நிதிஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.