ETV Bharat / state

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையில் மாற்றம் தேவை?

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையில் 10ஆம் வகுப்பில் உயர்மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

educationalist-urges-to-change-the-method-giving-12th-class-marks
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையில் மாற்றம் தேவை
author img

By

Published : Jun 27, 2021, 5:31 PM IST

சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, "12ஆம் வகுப்பு மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 10ஆம் வகுப்பில் அதிகம் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், கணக்கு பாட மதிப்பெண்கள்

கணக்கு, அறிவியல் பாடங்களின் மதிப்பெண்களை கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் எனக் கருதுகிறோம். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்களைச் சேர்க்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கும் வல்லுநர் குழு மறுசீரமைப்பு செய்வார்கள், தெளிவான அறிக்கையை அளிப்பார்கள் என கருதுகிறோம்.

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களின் கல்வி கற்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. 11 ம் வகுப்பில் ஆர்வம் சற்றுக் குறைவாகவும் இருக்கிறது. அறிவியல் பாடத்திட்டதிற்கான மதிப்பெண்களை மாெழிப்பாடத்துடன் சேர்த்துக் கருத முடியாது. அறிவியல் பாடத்திற்கான மதிப்பெண்களை இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய அனைத்துப் பாடங்களுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வணிகவியல் பாடத்தில் படிக்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்களை வழங்குவது குறித்து பின்னர் தெளிவான விதிமுறைகளை அறிவிப்பார்கள். 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை 3 பாடங்களில் இருந்து எடுப்பது குறித்தும் தெளிவாக அறிக்க உள்ளனர்.

உயர் மதிப்பெண் பெறக்கூடிய மாணவர் சிக்கல்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் தெளிவாக அறிவிப்பார்கள். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்" என்றார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர் முருகையன், " தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசு அறிவித்துள்ளது. இதில், சந்தேகம் உள்ளது. 10ஆம் வகுப்பில் ஒரு மாணவர் மொழிப்பாடம், வரலாறுப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களையும், கணக்கு, அறிவியல் பாடத்தில் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தால், அவரின் மதிப்பெண்கள் 100க்கு 100 என கணக்கிட்டு 50 மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

கல்வியாளர் முருகையன்

அவர் உயர் மதிப்பெண் பெறக்கூடிய மாணவராகி விடுவார். அறிவியல், கணக்குப் பாடத்தையும் புறக்கணித்து விட்டு, அவர் பொறியியல், விவசாயம் படிப்புகளில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். மொழிப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை.

அதேபோல் உயர் மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களில் இருந்து மதிப்பெண் எடுத்துக் கொள்ளவதற்கு மாற்றாக, அனைத்துப் பாடங்களிலும் இருந்து மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.