ETV Bharat / state

சிற்பி திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா - அரசு பள்ளி மாணவர்கள்

சிற்பி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 19, 2023, 5:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் 'சிற்பி' (SIRPI - Students In Responsible Police initiatives) என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார். காவல் துறை குறித்து, பள்ளி மாணவர்கள் அறிந்து, காவல் துறையுடன் வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும். பொறுப்பு மிக்க மாணவர்களாகவும் உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் தலையாய நோக்கமாகும். இதற்காக, சிற்பி திட்டத்திலுள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 2ஆயிரத்து 558 மாணவர்கள் மற்றும் 2ஆயிரத்து 442 மாணவிகள் என மொத்தம் 5ஆயிரம் மாணவர்களுக்கு, வாரந்தோறும், காவல் துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த 7ஆம் தேதியன்று காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சிற்பி திட்டத்தின் 5ஆயிரம் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதற்காக, உலக சாதனை யூனியன் (World Records Union), தமிழக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், (Tamilnadu Young Achlevers Book of Records), உலக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், (world Young Achievers Book of Records) ஆகிய 3 அமைப்பினர் சென்னை பெருநகர காவல் துறைக்கு மேற்படி 3 சாதனை சான்றிதழ்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியான கல்வி சுற்றுலாவுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (பிப்.19) காலை, சிற்பி திட்டத்தில் உள்ள 5ஆயிரம் மாணவ. மாணவிகளை, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், இரயில் மூலம் அழைத்துச் சென்று, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு (Tamilnadu Police Academy), இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றுலாவாக (Eco Friendy Educational Tour) அழைத்து செல்லப்பட்டனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று காலை. எழும்பூர் இரயில் நிலையத்தில் சிற்பி மாணவ, மாணவிகளின் இயற்கையுடனான கல்வி சுற்றுலா பயணத்தை கொடியசைத்து, இரயில் பயணத்தை தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெறும் இப்பயணத்திற்காக, 4 சிறப்பு இரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சிற்பி திட்டத்தின் 5,000 மாணவ, மாணவிகள், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் (Nodal Officers), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 5,000 மாணவ. மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை இரயில் மூலம் அழைத்து செல்வதால், சுற்று சூழல் மாசுபடாமல், இயற்கையை பேணி காக்கும் பயணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அம்பேத்கர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு - புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகம் முற்றுகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.