ETV Bharat / state

காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி - நேரடி வகுப்புகள்

தமிழ்நாட்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வு நடைபெறாது எனவும், அதற்கு பதிலாக பொதுத் தேர்வுக்கு முன்னதாக டிசம்பர் மாதம் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

author img

By

Published : Oct 12, 2021, 6:25 PM IST

சென்னை : சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

ஆலோசனை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஏற்கனவே 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட அனுபவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகள்

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் தைரியமூட்டும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் திறப்பு என்பது மாணவர்களை பள்ளிக்கு தொடர்ந்து வருவதை பழக்கப்படுத்துவதற்கு தான். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் செயல்படும்.

1 வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அரை நாள் பள்ளிகள் வைக்க வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. மாணவர்கள் எல்கேஜி, யூகேஜி வகுப்பிற்கு வராமல் நேரடியாக 1 ம் வகுப்பிற்கு வருகின்றனர். எனவே மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பெற்றோர்கள் வெளியில் இருக்கவும் அனுமதிக்கப்படும். மேலும் சிறியகுழந்தைகள் அதிக நேரம் மாஸ்க் போட்டுக் கொண்டு இருக்க முடியாது. அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள விதிமுறைகளின் படி மாணவர்கள் அனைவரும் மாஸ்க் போட வேண்டும்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

தூய்மை பணி

பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித்துறையின் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு 19 நாட்கள் இருப்பதால், அனைத்து பள்ளிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மழைக்காலம் என்பதால், கட்டிடங்கள் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு

மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடைபெறாது, அதற்குப் பதிலாக பொதுத்தேர்வு எதிர்கொள்வதற்கு மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு ஒன்று நடத்தப்படும். மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடங்க கல்வி இயக்குநர் அறிவொளி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலரகள் கலந்து கொண்டனர்.

Conclusion: கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு எடுக்கட்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.