ஊரடங்கு அமல்படுத்தி 90 நாள்கள் ஆகிவிட்டது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அதில், இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் மு..க.ஸ்டாலின்தான். தினம் தோறும் ஸ்டாலின் தவறான செய்திகளை பரப்பி வருகிறார். தகுந்த ஆலோசனையின்றி செயல்பட்டதால்தான் ஸ்டாலின் நல்ல எம்எல்ஏ நாம் இழந்துவிட்டோம். சேலம் மாவட்டம் மட்டும் தான் கண்களுக்கு தெரிவதாக ஸ்டாலின் கேட்கிறார்.
இதுவரை அரசு எதுவும் செய்யவில்லை என்ற தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவலை பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 2ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறவில்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. ஊரடங்கு அமல்படுத்தி 90 நாள்கள் ஆகிவிட்டன என்று அவர் தெரிவித்தார்.