சென்னை: அதிமுக உறுப்பினர் எனக்கூறி திண்டுக்கல்லைச்சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் இடைக்காலப்பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், பதவி நீக்கம் செய்யவும், புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும்’ இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பிரியா, இடைக்கால மனு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். ஒற்றைத்தலைமை தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது - புகழேந்தி