ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

edappadi-palanisamy
edappadi-palanisamy
author img

By

Published : Jan 21, 2020, 9:36 AM IST

இதுகுறித்து அக்கடிதத்தில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மத்திய சுற்றுப்புறசூழல், வனத்துறை அமைச்சகம், சுற்றுப்புற சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், கடற்கரை, அதற்கு வெளியில் நிறுவப்படும் எண்ணெய், எரிவாயு ஆய்வு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு திட்டங்கள், ’ஏ’ பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பின் மத்திய சுற்றுப்புறசூழல், வனத்துறை அமைச்சகம் 16ஆம் தேதியன்று திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஹைட்ரோகார்பன் ஆய்வு, பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு உணவளிக்கும் வளமான காவிரி டெல்டா பகுதியில் இதுபோன்ற பல திட்டங்கள் அமைக்கப்படுவதால், உணர்வுப்பூர்வமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பு கிளம்புகிறது.

எனவே அத்திட்டத்தை அமல்படுத்தும்போது, அந்தப் பகுதி மக்கள், பல்வேறு தரப்பினரையும் அழைத்து பேசி, அவர்களின் ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் உறுதி செய்வது அவசியமாகிறது. ஆனால் தற்போது திருத்தப்பட்டுள்ள அந்த அறிவிப்பாணை இதற்கு எதிராக அமைந்துள்ளது.

Edappadi Palanisamy
கடிதம்

திருத்த வரைவு அறிக்கை வெளியிடப்படாததால் தமிழ்நாடு அரசுக்கும், அதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கும் தங்களின் கருத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் தற்போதய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள சட்டத் திருத்தத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Edappadi Palanisamy
கடிதம்

இதையும் படிங்க: ‘விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தமாட்டேன் என முதலமைச்சர் உறுதியளிக்கணும்!’

Intro:Body:
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு திட்டத்தை மக்கள் கருத்தை கேட்காமல் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதியன்று மத்திய சுற்றுப்புறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், கடற்கரை மற்றும் அதற்கு வெளியில் நிறுவப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு திட்டங்கள், ’ஏ’ பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அந்த அறிவிப்பாணையில் மத்திய சுற்றுப்புறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 16-ந் தேதியன்று திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு தவிர, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஆகியவை ஏ பிரிவில் இருக்கும். ஆய்வு என்பது பி2 திட்டங்கள் என்ற பிரிவுக்கு மாற்றப்படுகிறது. பி2 பிரிவு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்கத் தேவையிருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதியன்று உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மேலும், அங்குள்ள விவசாயிகளின் நலன் முழுவதும் காக்கப்பட வேண்டும் என்றும் பல தரப்பினரிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்துவதன் அத்யாவசியம் குறித்தும் அதில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஹெட்ரோகார்பன் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு தமிழக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

தமிழகத்திற்கு சோறு தரும் வளமான காவிரி டெல்டா பகுதியில் இதுதொடர்பான பல திட்டங்கள் அமைக்கப்படுவதால், உணர்வுப்பூர்வமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பு கிளம்புகிறது.

எனவே அந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போது, அந்தப் பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து பேசி, அவர்களின் ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் உறுதி செய்வது அவசியமாகிறது. ஆனால் தற்போது திருத்தப்பட்டுள்ள அந்த அறிவிப்பாணை இதற்கு எதிராக அமைந்துள்ளது.

ஆனால் அறிவிப்பாணையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, சட்டப்படி திருத்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். திருத்த வரைவு அறிக்கை வெளியிடப்படாததால் தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தங்களின் கருத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே இதுபோன்ற காரணங்களை கணக்கில் கொண்டு, காவிரி டெல்டா பகுதியில் தற்போதய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். 2006-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடிதம் ஒன்றை மத்திய சுற்றுச்சூழல், வனம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.