சென்னை: வடகிழக்கு பருவழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் மழையால் பிரதான சாலைகளில் வெள்ள நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
சாலைகளில் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2ஆவது நாளாக நேரில் ஆய்வு செய்தார்.
வடசென்னை, ஆர்.கே.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும் எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர், முல்லை நகர் குடிசை பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி கம்பளி, பெட்சீட், 5 கிலோ அரிசி, கோதுமை, சர்க்கரை, பிரட், பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - நீதிபதிகள் காட்டம்