தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று தனது 80ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையடுத்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய உங்களுக்கு நீண்ட ஆயுளையும், அமைதியையும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் - அமைச்சர் விஜயபாஸ்கர்; முடிந்தது பனிப்போர்!