சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு நடத்தப்பட்டு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. நீண்ட காலங்களாக தீர்வு ஏற்படுத்த முடியாமல் உள்ள பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வரவே இந்த சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் குறைகள் உடனடியாக சரி செய்யப்படும். ஒருவேளை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அதற்காக உரிய காரணங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என குறைகூறி வருகிறார். ஆனால் இந்த 8 வருட ஆட்சியில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் குறைகள் நேரடியாக தீர்க்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை திட்டங்களுக்கான ஆய்வை அரசு செய்து வருகிறது. கரூரில் விரைவாகத் தடுப்பணை கட்டப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: அண்ணா உயிரியல் பூங்காவிற்கு அரிய பறவைகள் கொண்டு வர நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
Intro:Body:
முதலமைச்சர் உரை
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி மக்களின் பிரச்சினைகள் மனுக்களாகப் பெற்று, மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதி மக்களிடம் பெற்ற மனுக்களை பெற்று மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு சரியானதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
தாங்கள் வசிக்கின்ற வீட்டிற்கு அல்லது வீட்டு மனைக்கு பட்டா வாங்காமல் இருப்பவர்கள்.
பட்டா வேண்டுமென்று நிறைய பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து தகுதி இருந்தால் பட்டா வழங்குவதற்கு அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பவர்கள் மனு கொடுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் மனுக்களாக் கொடுத்து குறிப்பிட்டுச் சொல்லும் போது அவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. ஆனால் இது குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று சென்ற இடமெல்லாம் பேசி வருகிறார்.
கழக அரசு 8 ஆண்டுகளில் நிறைவேற்றிய பணிகள் இந்த பணிகள். ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை ஆகிய துறைகளிடம் பொதுமக்கள் வைத்த குறைகளை நேரடியாக தீர்த்து வைக்கப் பட்டிருக்கிறது.
பிறக்கின்ற குழந்தை களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியது தமிழக அரசு .
Conclusion: