சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மோதலில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சமூக விரோதிகள் நுழைந்து விடுவார்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தோம். ஆனால் இந்த அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. ராயப்பேட்டை காவல் நிலையம் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு தீர்மானத்தில் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரவுடிகளை அழைத்து வந்து தலைமை அலுவலகத்தை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது.
ஒருங்கிணைப்பாளராக பதவி மருத்துவமனையில் அடிபட்டு இருப்பவர்கள் கொடுத்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு சேர்ந்து போட்ட திட்டம் தான் என நிரூபணம் ஆகியுள்ளது. ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அஸ்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்