ETV Bharat / state

'எடப்பாடி தொகுதியில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது' - Latest tamilnadu news

சென்னை: தன் சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Breaking News
author img

By

Published : May 11, 2020, 12:58 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டதின்படி, தமிழ்நாடு முழுவதும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், என்னுடைய எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அடங்கியிருக்கும் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் பேரூராட்சி, ஜலகண்டாபுரம் பேரூராட்சி, நங்கவள்ளி பேரூராட்சி மற்றும் வனவாசி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய நடுத்தர 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, எனது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை வழங்குமாறு, அந்தப் பகுதி கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டேன்.

என்னுடைய அறிவுறுத்தலின்படி, இந்நிகழ்ச்சிகளில் கழகத்தின் சார்பில் மூன்று நிர்வாகிகள் மட்டுமே முகக்கவசம் அணிந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் சமூக இடைவெளியைக் கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.