ETV Bharat / state

ஏ.ஆர்.டி ஜுவல்லரி குழுமத்தின் 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை! - மோசடி வழக்கு

சென்னையில் ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனம் தொடர்புடைய 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ART Jewelry
ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனம் மோசடி வழக்கு
author img

By

Published : Apr 6, 2023, 3:33 PM IST

சென்னை: நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின். தங்க நகை சேமிப்பு, தங்க நகைக் கடன் மற்றும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம், 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை இந்நிறுவனம் அறிவித்தது. இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப்போவதாகக் கூறி பொதுமக்களை நம்பவைத்துள்ளனர், இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். முதலீட்டு பணத்தில் ஏ.ஆர். மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கியதாக கூறப்படுகிறது. சில நாட்கள் வட்டியை வாரி வீசி வந்த இந்நிறுவனம், கடந்த சில வாரங்களாக வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர். மால் என பல இடங்களில் முற்றுகையிட்டனர். அதன் பின்னர் அவர்களை குண்டர்களை வைத்து தாக்கியதால், வேறு வழியின்றி அனைவரும் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து நொளம்பூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள், புகார்களை வழங்கி வருவதால், ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் உட்பட நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அதிகப்படியாக புகார்கள் வருவதால் இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் மற்றும் தொடர்புடைய ஏஜெண்டுகள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இன்று நிறுவனத்துடன் தொடர்புடைய 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நொளம்பூர், திருமங்கலம், முகப்பேர் ஆகிய இடத்தில் உள்ள ஏ.ஆர்.டி மால், ஜுவல்லரி நகைக்கடை உள்ளிட்ட 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.பி.ஐ உத்தரவை மீறி, அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களை நம்ப வைத்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளனரா என நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் முடிவில் பறிமுதல் செய்யக்கூடிய ஆவணங்கள் மற்றும் பணத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை ஏ.ஆர்.டி ஜூவல்லரி மோசடியில் ஏஜெண்டு பிரியா போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தம்பி மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்க.. வேலை செய்த கடையில் திருடிய வடமாநில இளைஞர் வசமாக சிக்கிய சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.