மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவுள்ள நிலையில், அதை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகம் எதிரே தேசிய மின்சார தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மாநில மின்சார வாரியங்களை மேலும் பல நிறுவனங்களாகப் பிரிக்க கூடாது எனவும், மின்சார விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய மத்திய குழுவின் முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது,
"மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயல்கிறது. இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் சதையற்ற எலும்புக்கூடாக மாநில மின் துறைகள் மாறிவிடும்.
மேலும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்படும். இதனால், ஒருபோதும் மத்திய அரசு கொண்டுவரவுள்ள இச்சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.