கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே மாதம் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக, திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த அவசரப் பணிகளுக்கு இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்தி, வெளியூர் செல்வதாகக் கூறி, அதனை இ-பதிவு பிரிவிலிருந்து நேற்று(மே.17) தமிழ்நாடு அரசு நீக்கியது.
ஆனால், திருமண பிரிவை மீண்டும் சேர்க்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று(மே.18), இ-பதிவு இணையதளத்தில் மீண்டும் திருமணம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.