ETV Bharat / state

'தமிழ்நாட்டில் ரயில் மூலம் செல்ல ஈ-பாஸ் கட்டாயம் தேவை' - தென்னக ரயில்வே அறிவிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஒரு மண்டலத்தில் இருந்து பிற மண்டலம் அல்லது மாவட்டத்திற்கு ரயில் மூலம் செல்வதற்கு ஈ -பாஸ் கட்டாயம் தேவை என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

railway
railway
author img

By

Published : May 31, 2020, 9:43 PM IST

கரோனா பாதிப்பின் காரணமாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு பல தளர்வுகள் அளித்தாலும்; மாநில அரசு பாதிப்புக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மாவட்டங்களை எட்டு மண்டலங்களாகப் பிரித்து, தளர்வுகள் அளித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர; மற்ற மாவட்டங்களில் 60 விழுக்காடு பயணிகளுடன் பொது போக்குவரத்து செயல்படலாம். ஈ-பாஸ் அதற்குத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மண்டலத்தை விட்டு மண்டலம் சென்றால், கட்டாயம் ஈ-பாஸ் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி, ரயிலில் மண்டலம் விட்டு மண்டலம் பயணித்தாலும் ஈ-பாஸ் கட்டாயம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சிராப்பள்ளி - நாகர்கோயில், கோவை - காட்பாடி ஆகிய வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் மண்டலம் விட்டு, மண்டலம் செல்லும் ரயில்களில் பயணிக்க கட்டாயம் ஈ-பாஸ் தேவை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: உலகத்தரத்தில் மூன்று 3 ரக முகக் கவசங்கள் தயாரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.