தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன். இவர் மீது 2014-2020 வரை ரூ.3.78 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு காவலர்கள் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள், இன்று (அக்.22) சோதனை நடத்திவருகின்றனர்.
இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை தலைவராக உள்ளார். இதேபோல் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இதில் பெரும்பாலும் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்கள் என்று கூறப்படுகிறது.
இதேபோல், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உதவியாளர் ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சோதனை சென்னையில் 4 இடங்களில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : சிறையில் மகனை சந்தித்த நிலையில ஷாருக் கான் வீட்டில் ரெய்டு? நடிகைக்கு சம்மன்!