ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை - முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் எல்லாம் சோதனை

சென்னையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் காமராஜ்
முன்னாள் அமைச்சர் காமராஜ்
author img

By

Published : Jul 8, 2022, 4:45 PM IST

சென்னையை அடுத்த பனையூரில் முன்னாள் அமைச்சர் காமராஜின் சகோதரர் கருணாநிதியின் பங்களா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கருணாநிதி இறந்து விட்டதால் அவரது மனைவி முத்துலட்சுமி அந்த வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இதைபோல கருணாநிதியின் மற்றொரு வீடு அடையாறு சாஸ்திரி நகர் 5ஆவது குறுக்குத்தெருவில் இருக்கிறது. அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைபோல கருணாநிதி அவரது மனைவி முத்துலட்சுமி நடத்தி வரும் நிறுவனம் நீலாங்கரை சரஸ்வதி நகர் பாண்டியன் சாலையில் செயல்பட்டு வருகிறது. ஆர்கே. இன்டர்நேஷனல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சிவில் என்ஜினியரிங் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல, காமராஜ் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் செய்து வரும் நிறுவனம், மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் ஜிபிஏ கன்சல்டசிங் பிரைவேட் லிமிடெட் ஆகிய இடங்களில் இன்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜுக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனமான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.

இதைபோல அண்ணாநகர் மேற்கு 9ஆவது தெருவில் உள்ள விஷாக் இன்னொவேசன் பிரைவேட் லிமிடெட் (vishak innovation pvt ltd) என்ற மென்பொருள் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தை திருவாரூர் மாவட்டம் ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான தேசபந்துவின் மகன் ஹரீஷ் குமார் நடத்தி வருகிறார்.

இவர் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன்களுக்கு நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் 50 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.