ETV Bharat / state

Bribe: விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் - 2 காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! - இரண்டு காவல் ஆய்வாளர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

விபச்சார தடுப்புப்பிரிவில் பணியாற்றியபோது விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்றதாக இரண்டு காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம்
லஞ்சம்
author img

By

Published : Nov 16, 2021, 2:45 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சாம் வின்சென்ட். அதேபோல் சைதாப்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறையின் கீழ் செயல்படும் விபச்சார தடுப்புப்பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றியுள்ளனர்.

விபச்சார தடுப்புப் பிரிவில் இவர்களின் பணிக்காலத்தில் விபச்சார புரோக்கர்களிடமும், மசாஜ் பார்லர் (Massage parlour) என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பார்லர் உரிமையாளர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு சென்னையில் விபச்சாரத் தொழில் தடையின்றி நடப்பதற்கு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இரண்டு குழுக்களாக விபச்சார தடுப்புப் பிரிவு

மேலும் இவர்கள் இருவரும் அப்போது விபச்சார புரோக்கர்களாக கொடிகட்டி பறந்த பூங்கா வெங்கடேசன் மற்றும் ரவி ஆகியோரிடம் மாறி மாறி லஞ்சம் பெற்றதும், பெரும் லஞ்சத்தை பங்கு பிரிப்பதிலும் இரண்டு காவல் ஆய்வாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

விபச்சார தடுப்புப் பிரிவு சென்னை நகர் மற்றும் புறநகர் என இரண்டு குழுக்கள் உள்ளன. சென்னை நகர் குழுவிற்கு காவல் ஆய்வாளராக வரும் நபருக்கு அதிக லஞ்சம் வருவதாகவும், புறநகரில் லஞ்சம் குறைவாக வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே சென்னை நகரை யார் கைப்பற்றுவது என காவல் ஆய்வாளர் சாம் வின்செண்ட் மற்றும் சரவணன் இருவருக்கும் இடையே கடும் போட்டி அந்த காலகட்டத்தில் நிலவி வந்தது என்றும் கூறப்படுகிறது. இதற்காக இரண்டு காவல் ஆய்வாளர்களும் அப்போது ஆட்சியிலிருந்த அமைச்சர்களிடம் சிபாரிசுக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

புகாருக்கு உள்ளான இரண்டு அலுவலர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி, பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார் அப்போதைய காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்.

இந்த நிலையில் லஞ்ச புகாருக்கு ஆளான காவல் ஆய்வாளர்கள் சாம் வின்செண்ட் மற்றும் சரவணன் ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் சொந்தமான இடங்களில் இன்று (நவ.16) காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் (Directorate of Vigilance and Anti-Corruption) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள காவல் ஆய்வாளர் சாம் வின்செண்ட் வீட்டிலும் அதேபோல புழுதிவாக்கம் ஜெயலக்ஷ்மி நகரில் உள்ள காவல் ஆய்வாளர் சரவணன் வீட்டிலும் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான பத்திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதையில் ஆடையின்றி பக்கத்து வீட்டிற்குள் புகுந்த அதிமுக முன்னாள் எம்பி பதவி பறிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.