ETV Bharat / state

Cognizant Technology கட்டுமானத்திற்கு ரூ.12 கோடி லஞ்சம்: 9 பேர் மீது வழக்குப்பதிவு! - cmda

சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்காக சிஎம்டிஏ அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 28, 2023, 11:47 AM IST

சென்னை: 2011 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் டெக்னாலஜி அடுக்குமாடி அலுவலகம் கட்டுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority) அதிகாரிகளிடம் திட்ட அனுமதி பெற வேண்டும். கட்டுமானம் கட்டுவதற்கு முன்பாக திட்ட அனுமதி பெற வேண்டும் என்பது விதி. எனவே, இதற்காக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு 2014ஆம் ஆண்டுக் காலம் தாழ்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய காலகட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதுவே, அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்குக் காரணமாகவும் அமைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: EPFO Interest Hike: ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இபிஎஃப் வட்டி விகிதம் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

இவ்வாறாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் (சிடிஎஸ்) காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனம், எல் அண்ட் டி முன்னாள் கட்டுமானப் பிரிவு தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன், முன்னாள் செயல் துணைத் தலைவர், தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ், தற்போதைய கட்டுமான பிரிவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஆகிய 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பர்கள் முன்பு அடித்ததால் ஆத்திரம்.. பெரம்பூர் அதிமுக நிர்வாகி படுகொலையில் திடீர் திருப்பம்.. சிறுவன் உட்பட 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.