ETV Bharat / state

‘அதிமுகவுக்கு தில் இல்லை’ - வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்! - caa issue at tn assembly

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

duraimurugan
duraimurugan
author img

By

Published : Jan 9, 2020, 12:09 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஆனால், அத்தகைய தீர்மானத்தை இயற்ற இந்த அரசு அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர அதிமுகவிற்கு தில் இருக்க வேண்டும். அத்தகைய தில் இவர்களுக்கு இல்லை.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

இதுகுறித்து கேட்டால், தீர்மானம் இன்னமும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆய்வில் இருக்கிறது என்பதற்கு ஆயுள் இல்லை என்று பொருள். பிகார், ஆந்திரா, கேரளா போன்ற மாநில முதலமைச்சர்களுக்கு இருக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை’ என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘நாங்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல’ - துரைமுருகன் அதிரடி

Intro:Body:அதிமுக அரசிற்கு மத்திய அரசை எதிர்க்க தில் இல்லை - துரைமுருகன்

குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கவில்லை என்பதால் திமுக சட்ட பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனம் தீர்மானம் கொண்டு வந்தது போல் தமிழக சட்ட பேரவையில் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னரே வலியுறுத்தி மனு அளித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து அது ஆய்வில் உள்ளது என்று கூறி வருகின்றனர். இந்த அரசு அந்த தீர்மானத்தை கொண்டு வர அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர அதிமுகவிற்கு தில் இருக்க வேண்டும். அத்தகைய தில் இவர்களுக்கு இல்லை என சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆய்வில் உள்ளது உள்ளது என்று இன்று சட்ட பேரவை கடைசி நாளிலும் கூறுகின்றனர். ஆய்வில் உள்ளதற்கு இனி ஆயுள் இல்லை என்பது பொருள் என விமர்சித்தார்.

பிஹார், ஆந்திர, கேரள போன்ற மாநில முதல்வர்களுக்கு உள்ள தைரியம் அதிமுக விற்கு இல்லை என கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.