ETV Bharat / state

அத்திக்கடவு - அவினாசி திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் - அமைச்சர் துரைமுருகன் - அத்திக்கடவு அவினாசி திட்டப் பணி

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து, ஜனவரி இறுதிக்குள் செயல்பாட்டிற்குக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Department of Water Resources  athikadavu avinasi project  Water Resources  அத்திக்கடவு அவினாசி திட்டம்  நீர்வளத்துறை  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  துரைமுருகன்  அத்திக்கடவு அவினாசி திட்டப் பணி  duraimurugan
துறைமுருகன்
author img

By

Published : Oct 28, 2022, 8:57 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று (அக்டோபர் 27) அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் மற்றும் சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் தற்சமயம் சுமார் 97 விழுக்காடுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் குழாய்ப்பதிக்கும் பணிகளில் மொத்தம் 1065 கி.மீட்டரில் சுமார் 1033 கி.மீ. தூரத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன' என்றார்.

மேலும், 'ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணிகள் முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் அனைத்துப் பணிகளும் முடித்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், 'சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 விழுக்காடுப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது' - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.