சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் இன்று (டிச.18) ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயிகல்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:-
- சென்னையிலிருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.
- நெல்லை - சென்னை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் இருமார்க்கங்களிலும் ரத்து.
- திருச்சி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.
- நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.
- நெல்லை - திருச்செந்தூர் ரயில் ரத்து.
- திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரயில்கள் ரத்து.
- நிஜாமுதீன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் விரைவு ரயில்கள் கோவில்பட்டியில் நிறுத்தம்
- சென்னை எழும்பூர் - கொல்லம் விரவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்.
- தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் கொடை ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தம்.
திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் பின்வருமாறு:-
- 06685 திருநெல்வேலி - செங்கோட்டை - காலை 7 மணி
- 06682 செங்கோட்டை - திருநெல்வேலி - காலை - 6:40
- 06681 திருநெல்வேலி - செங்கோட்டை - காலை - 9:45
- 06684 செங்கோட்டை - திருநெல்வேலி - காலை 10:00
- 06687 திருநெல்வேலி - செங்கோட்டை - மதியம் 1:50
இதையும் படிங்க: நெல்லை கன்னடியன் அணைக்கட்டிலிருந்து 1000 கன அடி வெள்ள நீர் கால்வாயில் பரிசோதனைக்குத் திறப்பு..!