இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தண்டவாளப் பணிகள் நாளை நடைபெற உள்ளதால் (ஜூலை 16) ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம், தாமதமாகப் புறப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்
வண்டி எண்: 66041 - சென்னை கடற்கரை - காலை 9.50க்கு இயக்கப்படும் ரயில் ரத்து.
வண்டி எண்: 66043 - சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் இடையே நாளை காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து.
வண்டி எண்: 66045 - மேல்மருவத்தூர் - விழுப்புரம் இடையே நாளை காலை 11.30 மணிக்கும் இயக்கப்படும் ரயில்
வண்டி எண்: 66046 - விழுப்புரம் - மேல்மருவத்தூர் இடையே பிற்பகல் 1.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்
வண்டி எண்: 66044 - மேல்மருவத்தூர்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்
வண்டி எண்: 56860 - விழுப்புரம் - தாம்பரம் இடையே காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்
வண்டி எண்: 56859 - தாம்பரம்- விழுப்புரம் இடையே மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
தாமதமாகப் புறப்படும் ரயில்களின் விவரம்
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை காலை 8.10 மணி முதல் பிறdபகல் 2.10 மணி வரை இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பிற்பகல் 2 மணிக்கும், வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.10 மணிக்கு மேல் ரயில்கள் இயக்கப்படும்.
வண்டி எண்: 56038 - புதுச்சேரி- சென்னை எழும்பூர் இடையே நாளை இயக்கப்படும் பயணிகள் ரயில் மேல்மருவத்தூர்- சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்: 12605 - சென்னை எழும்பூர்- திருச்சி இடையே நாளை மாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் 60 நிமிடம் தாமதமாக புறப்படும்.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே நாளை காலை 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45, 2.15, 2.45, 3.40, 4.10, 4.50, 5.20, 5.40, 6.10, 6.30, 6.50, 7.40, 8.10, 8.52 மணிக்கும், சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே பிற்பகல் 1.30 மணிக்கும் இயக்கப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது.
திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே நாளை காலை 11.30, மாலை 6.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே காலை 11.50, 12.15, 1, 1.50, 2.25, 3.15, 3.40, 4.35, 5, 5.30, 6.05, 6.25, 6.40, 7.25, 7.45, 8.50, 9.10, 10.15, 11.10 மணிகளுக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்:
செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே நாளை பிற்பகல் 2.50, 4.50 மணிக்கும், செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே 8.45 மணிக்கும், திருமால்பூர்- செங்கல்பட்டு இடையே காலை 10.25, மாலை 5.10, இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.