ETV Bharat / state

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: கரோனா பரிசோதனை அதிகரித்த சென்னை மாநகராட்சி - Corona in Chennai Corporation

சென்னையில் ஒமைக்ரான்  தொற்று அச்சுறுத்தல் காரணமாகத் தினசரி கரோனா பரிசோதனையை  சென்னை மாநகராட்சி அதிகரித்துள்ளது.

கரோனா பரிசோதனை அதிகரித்த சென்னை மாநகராட்சி

author img

By

Published : Dec 12, 2021, 7:33 AM IST

சென்னை: சர்வதேச நாடுகளில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, சென்னையில் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக புதிய clusterகள் உருவாகி வருகிறது.

இதன் காரணமாக தினசரி செய்யப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி. ஒரே குறிப்பிட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது சென்னையில் அதிகரித்து வருகின்றன.

தினமும் சென்னையில் இரண்டு அல்லது மூன்று clusterகள் உருவாகின்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

இதனையடுத்து, சென்னையில் மேற்கொள்ளப்படும் தினசரி கரோனா பரிசோதனையை அதிகரித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமும் சராசரியாக 11 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தற்போது பதினைந்தாயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் மாதிரிகள் சேகரித்து சோதனை செய்யும் முறையும் விரைவில் தொடங்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிபின் ராவத் சர்ச்சை: இந்து மதம் மாறும் இஸ்லாமிய இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.