ETV Bharat / state

எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் தொடரும் விபத்துகள்.. சென்னையில் நடந்தது என்ன? - bike accident in chennai

போதுமான விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் மின்விளக்குகள் இல்லாததால் பூந்தமல்லி மின்சார வாரியம் சார்பில் கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இருவரில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் தொடரும் விபத்துகள்.

author img

By

Published : Aug 11, 2023, 1:21 PM IST

எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் தொடரும் விபத்துகள்.

சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி மின்சார வாரியம் சார்பில் கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த மற்றொருவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னையில் பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மின்சார வாரியம் சார்பில் சாலை விரிவாக்க பணி, மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்காக கேபிள் இணைக்க ராட்சத கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் பகுதிகளில் போதிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில் நாள்தோறும் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குணா (வயது25) இவரது நண்பர் மதிவாணன். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மின் பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு ஷிப்ட் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் நண்பர் மதிவாணனுடன் சென்ற போது கேபிள் புதைக்க தோண்டப்பட்ட சுமார் பத்து அடி ஆழம் 20 அடி அகலம் கொண்ட பள்ளத்தில் இருவரும் விழுந்து விபத்தில் சிக்கினர்.

இதையும் படிங்க: என்ஐடி நேரடி பணி நியமன விவகாரம்: செயலர் சுற்றறிக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

பள்ளமானது கால்வாய் போல அமைக்க கம்பிகள் கட்டப்பட்டு இருந்ததால் தலையில் கம்பிகள் குத்தி பலத்த காயம் ஏற்பட்டதால் குணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மதிவாணன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவ இடத்திற்க்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், இறந்து போன குணாவின் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெறும் பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் மின்விளக்குகள் இல்லாததால் பணி நடைபெறுவது தெரியாமல் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் பணிகளால் பல உயிர்கள் பறிபோகின்றன. இனியாவது முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: 6 மாதங்களில் 5,358 போதைப்பொருள் வழக்குகள் பதிவு - தமிழக காவல் துறை வெளியிட்ட ரிப்போர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.