ETV Bharat / state

உலகக் கோப்பையால் பயணத்தை கைவிட்ட பயணிகள்.. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து!

6 flights were canceled at Chennai airport: போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 5:26 PM IST

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை வீடுகளில் இருந்து தொலைக்காட்சிகளில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில். இன்று பெரும்பாலானோர் பயணங்களை தவிர்த்ததால், சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ஆர்வம்: 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று (நவ.19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானமான, நரேந்திர மோடி கிரவுண்டில் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

பயணிகளின் எண்ணிக்கை குறைவு: இந்த இறுதி போட்டியில், இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்ற நிலை இருப்பதால், நாடு முழுவதும், பெரும்பாலானோர் போட்டியை நேரில் காண அகமதாபாத் சென்றுள்ளனர். பலர் இன்று முக்கிய வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, போட்டியை காண்பதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் இன்று விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

6 விமானங்கள் ரத்து: இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில், இன்று போதிய பயணிகள் இல்லாமல், 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று காலை 9:25 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3:30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதைப்போல் காலை 8:05 மணிக்கு, பெங்களூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆக, சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமான சேவைகள், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை, இறுதி கிரிக்கெட் போட்டியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில், இன்று பெரும்பாலானோர் பயணங்களை ரத்து செய்து விட்டதால், சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல், இன்று ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2 நாட்களாகியும் பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேக்கம்.. பயணிகள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.