சென்னை: கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று (டிச.10)மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் தற்போது மூன்றாவது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தின் உயரம் 20.37 அடியும், மொத்த கொள்ளளவு 2695 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 709 கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க:மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்!