சென்னை: வடகிழக்குப் பருவ மழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சாலைகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்
1. ஈசிஆர் சாலை கங்குரெட்டி சுரங்கப்பாதை
2. துரைசாமி சுரங்கப்பாதை
3. கொரட்டூர் சுரங்கப்பாதை
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலைகள்
ஈவிஆர் சாலையில் இருந்து காந்தி இர்வின் பாலம் நோக்கிச்செல்லும் வாகனங்கள் ஈவிகே சம்பத் சாலையில் வேப்பேரி காவல் நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. மற்றும் சிலப் பகுதிகளில் தற்காலிகப்போக்குவரத்து மாற்றம் சூழ்நிலைக்கேற்ப செய்யப்பட்டு வருகிறது.
சாலையோரம் மரம் விழுந்த பகுதிகள்
1.சித்தரஞ்சன் சாலை
2.தணிகாசலம் ரோடு
3.கச்சேரி ரோடு
இந்தப் பகுதிகளில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் ஊழியர்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மழை நீரில் தத்தளித்தவாறு வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றன. வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனப் போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீரில் மிதக்கும் சென்னை