ETV Bharat / state

கொட்டித்தீர்த்த மழையால் தெப்பக்குளமாகிய சென்னை ஏர்போர்ட்.. பயணிகள் சிரமம்!

Chennai Rains:சென்னையில் பெய்த கனமழையால், சென்னை விமான நிலைய வெளி வளாக கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினால், வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 6:20 PM IST

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் இன்று (நவ.3) காலை முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான முனையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழந்தது. இங்குள்ள மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, மழைநீர் தேக்கமடைந்தது.

இதையடுத்து அந்த மழைநீர் அம்மன் கோயில் அருகே உள்ள பாதையின் வழியாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை வெளிப்பகுதியில் பயணிகளின் வாகனங்கள் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. விமான நிலையத்தின் மேடான பிக்கப் பாய்ண்ட் பகுதியில் இருந்து பள்ளமான பகுதிக்குள் மழைநீர் அருவி போல் கொட்டியதால் விமான நிலையத்திற்குள் சுற்றி அலையும் தெரு நாய்கள், அதில் குளித்து விளையாடின. இதனால், உள்நாட்டு விமானங்களில் வந்து, வெளியே வாகனங்களில் ஏற வரும் பயணிகள் சிரமத்து ஆளாகினர்.

அதோடு இதேநிலை நீடித்தால், மழைநீர் உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதி உள்ளே புகுந்துவிடும் ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் ஆகியோர் மூலமாக சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள மழைநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைத்தனர்.

இதையடுத்து விமான நிலைய வளாகத்தில் சூழ்ந்து இருந்த மழைநீர், கால்வாய் வழியாக வெளியேற தொடங்கியது. இதனால், சுமார் 30 நிமிடங்கள் நேரத்தில் நிலமை சீரடைந்தது. இந்த மழைநீர் வெள்ளம் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தின் உள்பகுதியில் பயணிகளுக்கோ அல்லது விமான சேவைகளுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'மழைநீர் கால்வாயில் திடீரென ஏற்பட்ட அடைப்பு காரணமாக இதைப்போல் விமான நிலைய வளாகப் பகுதியில் உள்ள மழை நீர் கால்வாய் வழியாக செல்லாமல் உள்நாட்டு விமான விமான பயணிகளின் வாகனங்கள் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்வதில் சிறிது சிரமம் ஏற்பட்டது. மழைநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு உடனடியாக சீரமைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மழை நீர் வழக்கமான கால்வாய் வழியாக சென்றது.

இதனால், விமான நிலையத்தின் உள்பகுதியில் பயணிகள்ப்மற்றும் விமான சேவைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. ஆனாலும் மழை நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு அகற்றுவதில் கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் பற்றி விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம். இனிமேல் இதைப்போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வானில் வட்டமடித்த 5 விமானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.