சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் ராஜசேகருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், துபாயில் இன்டர்போல் போலீசார் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைதான ராஜசேகரை, சென்னை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ராஜசேகர், கடந்த மூன்று வருடமாக தேடப்பட்ட வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு மக்களை கவரும் வகையில், பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதற்கு 35 ஆயிரம் ரூபாய் பத்து மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுவிட்டு ரூ.2,438 கோடி ரூபாய் வரை பெற்று ஆருத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்தது. மேலும் அதன் நிர்வாகிகள் தலைமறைவாகினர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தொடர்ந்து புகார்கள் அளித்தனர். அதன் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக சோதனைகளை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
ஆருத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி தொடர்பாக சுமார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில், 21 பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூ.200 கோடி மதிப்புடைய சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
அதேபோல், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் அதன் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி துபாயில் தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும், இந்த மோசடி விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் துபாயில் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர்களைப் பிடிப்பதற்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.
தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மத்திய உள்துறை அதிகாரிகள் மூலம் துபாயில் உள்ள நபர்களைப் பிடிப்பதற்கு இன்டர்போல் (INTERPOL) உதவியை நாடினர். அதன் அடிப்படையில் துபாய் போலீசாருடன் எம் லாட் என்ற ஒப்பந்தம் போடப்பட்டு அவர்களை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரை இன்டர்போல் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாயில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜசேகர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை சென்னை அழைத்து வருவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரத்தில் அதன் உரிமையாளர் ராஜசேகரை துபாயில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகபதிவ
இதையும் படிங்க: ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு!