அமமுக கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். அவர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் டிடிவி தினகரனை விமர்சிக்கும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோ பதிவில், 'என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குங்கள், தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்' என்று இடம் பெற்றிருந்து. இதையடுத்து இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரை, தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.