ETV Bharat / state

ஆசிரியர் பயிற்சிப் பட்டயத் தேர்வு: 4,000 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்! - ஆசிரியர் பயிற்சி தேர்வு

சென்னை: ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான பொதுத் தேர்வு எழுதிய 4000 மாணவர்களில் 105 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என வெளியான தகவல் மாணவர்கள் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு
author img

By

Published : Oct 21, 2019, 9:34 PM IST

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான தேர்வினை அரசுத் தேர்வுத் துறை நடத்திவருகிறது.

கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பயிற்சிக்கான முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வுகளில் நான்காயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நாளை (அக். 22ஆம் தேதி) பிற்பகல் வெளியிடப்படும் எனத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே தேர்வெழுதிய நான்காயிரம் மாணவர்களில் வெறும் 105 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தேர்வுத் துறை அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. முதலாம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் வெறும் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக வெளியான தகவலால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பது தேர்வுத் துறையையும் கல்வித் துறையையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் முறையான வகுப்புகள் நடத்தப்படாமலும் போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்து பயிற்சி அளிக்காமல் இருந்ததும்தான் இது போன்ற தேர்வு முடிவுகள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில், மாணவர்களுக்கு அதிகளவில் முறைகேடாக மதிப்பெண்களை வழங்கியதாக 300-க்கு மேற்பட்ட ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - முப்பருவ கல்வி முறையில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் குழப்பம்

Intro:ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வில்
4,000 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி
அரசுத் தேர்வுத்துறை அதிர்ச்சி Body:ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வில்
4,000 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி
அரசுத் தேர்வுத்துறை அதிர்ச்சி

சென்னை,
ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான பொதுத் தேர்வில் 4000 மாணவர்கள் எழுதியதில் 105 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 1 முதல் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான தேர்வினை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்தன . இந்த தேர்வுகளில் நான்காயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் 22.10.2019(நாளை) பிற்பகல் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே தேர்வு எழுதிய 4 ஆயிரம் மாணவர்களில் வெறும் 105 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளன.
முதலாம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் வெறும் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பில் மாணவர்கள் சேர்வது குறைந்து வரும் நிலையில், தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பது  தேர்வு துறையையும், கல்வித்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான பயிற்சி நிறுவனங்களை நடத்தும் கல்வி நிறுவனங்களில் முறையான வகுப்புகள் நடத்தப்படாமலும், போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்து பயிற்சி அளிக்காமல் இருந்ததும் இது போன்ற தேர்வு முடிவுகள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மாணவர்களுக்கு அதிகளவில் முறைகேடாக மதிப்பெண்களை போட்டதாக 300க்கு மேற்பட்ட ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.