ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Dry weather
வறண்ட வானிலை
author img

By

Published : Apr 15, 2023, 3:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(ஏப்ரல் 15) முதல் 19ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும் (ஏப்ரல் 15), நாளையும் (ஏப்ரல் 16) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் வெப்ப அலை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவை எட்டவில்லை. வெப்ப அலை நிகழ்வு பதிவாக வாய்ப்பு இருந்தால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு ஏதுமில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலையில் 'இம்மர்சிவ்' படிப்பு.. பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.