சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 433 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
2 ஆயிரத்து 503 ஏரிகள் மழையினால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 2 ஆயிரத்து 66 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 2ஆயிரத்து 802 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளதாகவும், மிக குறைந்த அளவில் 2ஆயிரத்து 991 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளதாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இந்தாண்டு இயல்பை விட 35 விழுக்காடு அதிகமாக பெய்தது. இந்த நிலையிலும் 433 ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் வறண்டு கிடப்பதாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள 90 முக்கிய நீர்தேக்கங்களில் இன்றைய நிலவரப்படி நீரின் கொள்ளளவு 194.029 டிஎம்சி உள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இந்தாண்டு இயல்பை விட 35 விழுக்காடு அதிகமாக மழை பெய்ததால் முக்கிய ஏரிகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டுமளவுக்கு இருந்தது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களில் போதுமான அளவுக்கு நீரின் கொள்ளளவு இருந்தது.
மேலும் வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் 100 அடி கனவீதம் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நவ.9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி