சென்னை: திருவான்மியூர் பகுதியில் காவல்துறையினர் இரவு நேர வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த டோட்லா சேஷ, பிரசாத் ஆகிய இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, டோட்லா சேஷ காரை பறிமுதல் செய்யவிடாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், காவல் ஆய்வாளர் மாரியப்பன் என்பவரை தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காரை ஒட்டிவந்த டோட்லா சேஷ, காரில் அமர்ந்து வந்த பிரசாத் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி மீது காரை மோதிய குடிபோதை ஆசாமி, அதிர்ச்சி சிசிடிவி காட்சி!