ETV Bharat / state

என்னாது ஒரு கிலோ 400 ரூபாயா...! - குறைந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

drumstick price hike in tamil nadu  drumstick price hike  vegetable price continue to hike  vegetale price hike in tamil nadu  chennai news  chennai latest news  காய்கறி விலை உயர்வு  தமிழ்நாட்டில் காய்கறி விலை உயர்வு  கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கக்காய் விலை உயர்வு  முருங்கக்காய் விலை  குறைந்த தக்காளி விலை  அதிகரித்த முருங்கக்காய் விலை
முருங்கக்காய் விலை உயர்வு
author img

By

Published : Dec 14, 2021, 7:21 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி மட்டுமின்றி பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனையடைந்தனர். மேலும் முருங்கைக்காயின் சீசன் முடிவடைந்துள்ளதால் முருங்கைக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விலையேற்றம் - மக்கள் அவதி

இந்நிலையில் முருங்கைக்காய் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்த நிலையில், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது கிலோ 50 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் முங்கைக்காய் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நான்கு முங்கைக்காய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'நிவாரணத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' - திருவாரூர் விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.