சென்னை: பழைய விமான நிலையத்தில் உள்ள கார்கோ பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்படவிருந்த ஒரு சரக்கு விமானத்தில், சரக்கு மற்றும் கொரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனர்.
அப்போது அமெரிக்காவிற்கு அனுப்ப வந்திருந்த நான்கு பார்சல்களில் இரண்டு பார்சல்கள் சென்னை எத்திராஜ் சாலை முகவரியிலிருந்தும், அடுத்த இரண்டு பார்சல்கள் சென்னை சேத்துப்பட்டு முகவரியிலிருந்தும் வந்திருந்தன.
நான்கு பார்சல்களிலும் முக்கியமான ஆவணங்கள் என்று ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது சுங்கத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பார்சல்களில் உள்ள செல்ஃபோன் எண்களை தொடர்புகொண்டனர்.
போதை மாதிரைகள்
அப்போது பார்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள செல்ஃபோன் எண்கள், முகவரி அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து நான்கு பார்சல்களையும் பிரித்து பாா்த்து சோதனையிட்டனர்.
அந்த பார்சல்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 4,180 போதை மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகளை உடல் வலிமை மற்றும் சக்திக்காக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத்திரைகள் போதை மாத்திரைகளாக பயன்படுத்தப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே இந்த மாத்திரைகள் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளுக்கு அனுப்புவற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதியுடன் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இந்த மாத்திரைகளை மறைத்து, முக்கிய ஆவணங்கள் என்ற பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சி நடந்துள்ளது.
இதையடுத்து சுங்கத்துறையினர் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, போதை மாத்திரை பார்சல்களை அமெரிக்காவிற்கு அனுப்ப முயன்ற டெல்லி நபர்களை தேடி வருகின்றனா்.
உயர் ரக கஞ்சா பறிமுதல்
இதற்கிடையே கனடாவிலிருந்து பரிசு பொருள் என்று குறிப்பிடப்பட்டு மூன்று பார்சல்கள் சென்னை முகவரிக்கு வந்திருந்தன. அந்த பாா்சல்கள் மீதும் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பார்சல்களை பிரித்து சோதனையிட்டனா்.
அப்போது அதில் பதப்படுத்தப்பட உயர்ரக கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனா். மூன்று பார்சல்களிலும் 194 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா போதைப் பொருள் இருந்தது.
அதன் சர்வதேச மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூன்று பாா்சல்களையும்பரிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது