ETV Bharat / state

போதை மாத்திரை கடத்தியவர் விமான நிலையத்தில் கைது!

சென்னை: காய்சல், வலி நிவாரணி மாத்திரைகள் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு போதை மாத்திரைகளை சரக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற சென்னையைச் சோ்ந்த ஒருவா் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

போதை மாத்திரை கடத்திய நபர் விமான நிலையத்தில் கைது!

author img

By

Published : Sep 15, 2020, 10:06 PM IST

சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு சரக்கு விமானத்தில் கொரியா் அனுப்ப வந்திருந்த பாா்சல்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னை முகவரியிலிருந்து அமெரிக்காவின் புளோரிடா நகருக்கு அனுப்ப ஒரு பாா்சல் வந்திருந்தது. அதனுள் காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. அதை பாா்க்கும்போது கரோனா தடுப்பு மாத்திரைகள் என்பது போல் தெரியவந்தது.

பின்னர், சுங்க அலுவலர்களுக்கு அந்த பாா்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சலை பிரித்து சோதனையிட்டதில், மூன்றாயிரத்து 440 மாத்திரைகள் இருந்தன. அவைகள் அனைத்தும் பலவகை போதை மாத்திரைகள் என்று தெரியவந்தது. அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.15 லட்சம் ஆகும்.

இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், அந்த பாா்சலை அமெரிக்காவுக்கு அனுப்ப பதிவு செய்திருந்த சென்னையைச் சோ்ந்த நபரை கைது செய்த அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காய்ச்சல், தலைவலி, வலி நிவாரணி மாத்திரைகள் என்றால் கரோனா வைரஸ் தடுப்பு மாத்திரைகள் என்று அலுவலர்கள் சோதனையில்லாமல் அனுப்பி விடுவாா்கள் என்று அவ்வாறு பாா்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதுபற்றியும் சுங்கத்துறையினர் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.