சென்னையில் போதைப் பொருள் கடத்தியவர் கைது - 20 மூட்டை பறிமுதல் - Gutka
சென்னை: மினி சரக்கு லாரியில் போதைப் பொருள் கடத்திய நபர் கைதுசெய்யப்பட்டு 20 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை அடையாறு பகுதிக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்வதாக திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் அண்ணா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாலாஜா சாலை வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி சரக்கு வாகனத்தை மடக்கி விசாரணை செய்தனர். அதில், வாகனத்தில் இருந்த 20 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
பின்னர், கொடுங்கையூரைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் (34) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையிலிருந்து போதை பொருள்களை அடையாறு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:சாலையில் புகையிலை பொருட்கள் வீசிச் சென்றவர் கைது !