ETV Bharat / state

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: மயிலாப்பூரில் ஒருவர் கைது! - காவல்துறை விசாரணை

சென்னை: மயிலாப்பூர் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.

Drug dealer arrested - Drugs worth Rs 10 lakh seized

author img

By

Published : Aug 31, 2020, 10:53 PM IST

சென்னை மயிலாப்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக மயிலாப்பூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாப்பூர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பெட்டியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்த பெட்டியைப் பறிமுதல்செய்து சோதனைசெய்ததில் 370 கிராம் கெட்டமைன், 87 போதை ஸ்டாம்புகள், 33 போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அதனைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், முகமது அனீஸ் (30) என்ற இளைஞரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்கள், எடை அளவு, ரூ.2,500 ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.

மேலும் இந்த வழக்கு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முகமது அனீசிடம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கடலில் மாயமான 12ஆம் வகுப்பு மாணவனின் உடல் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.