ETV Bharat / state

47 நாள்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய புரசைவாக்கம்! - dress shops reopened in purasawalkam

சென்னை: ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பாண்டிபஜாரில் இன்று முதல் பெரும்பாலான சிறு ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டன.

புரசைவாக்கம்
புரசைவாக்கம்
author img

By

Published : May 11, 2020, 11:04 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், சில பணிகளுக்குத் தளர்வினை தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அந்தவகையில் டீக்கடைகளில் பார்சல் மட்டும், பேக்கரிகள் பார்சல் மட்டும், உணவகங்கள் பார்சல் மட்டும், பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமென்ட், ஹார்ட்வேர்ஸ் விற்கும் கடைகள், மின்சாதனப் பொருட்கள், பழுது நீக்கும் கடைகள், சிறிய ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் சிறு ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள், கவரிங் நகைக் கடைகள், பெட்டிக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகமூடி கட்டாயம் அணிந்து வரும்படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கடை ஊழியர்கள் வாடிக்கையாளரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

புரசைவாக்கத்தில் இன்னும் பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைகளை தினமும் ஐந்து முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றும்; கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கைகளைச் சுத்தம் செய்த பின்பு தான் அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பேருந்து மூலம் சொந்த ஊர் சென்ற அசாம் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.