மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாக உறுப்பினர்கள் வெளியேறி விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தலைமை நிலைய பொதுச் செயலர் டாக்டர். சந்தோஷ் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைத் தலைவரிடம் கொடுத்தனர். தேர்தல் கால செயல்பாடுகளை ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கிறது.
கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: காலை முதல் மாலை வரை - முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள்!