ETV Bharat / state

பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா? - increased age of woman marriage

சென்னை: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா என்று சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை செய்திகள்  சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம்  மருத்துவர் ரவீந்திரநாத்  dr ravindranath  increased age of woman marriage  பெண்களின் திருமண வயது
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா?
author img

By

Published : Aug 17, 2020, 8:57 PM IST

இதுதொடர்பாக சமூக சமத்துவத்தற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா? தங்களின் மதவாத, சாதிய நோக்கங்களை, அரசியலை வென்றெடுப்பதற்கு பெண்களை பகடைக் காய்களாக மாற்றுவது சரியல்ல. சில சக்திகள் தொடர்ந்து அவ்வாறு முயல்கின்றன.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அத்தகையது தான்.

பெண்களின், ஆண்களின் திருமணம் வயதை இனி மேலும் சட்ட ரீதியாக உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. அது பல்வேறு மோசமான சமூக, பண்பாட்டு விளைவுகளையே உருவாக்கும். மோசமான கலாச்சார மாற்றங்களுக்கும் வழி வகுக்கும். 18 வயதை கடந்த உயர் கல்வி பயிலும் பெண்கள் யாரும் இப்பொழுது உடனடியாக திருமணம் செய்து கொள்வதில்லை.

ஆண்களை போன்றே லட்சிய உணர்வோடு, வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு பெண்களும் உழைக்கின்றனர்;முன்னேறுகின்றனர்;சாதிக்கின்றனர். தாங்களகாவே முன்வந்து தங்களின் திருமணங்களை தள்ளிப்போடுகின்றனர்.
இது பல நாடுகளில் மோசமான நிலையை எட்டியுள்ளது. 30 வயதுக்கும் மேலும், பல வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். குழந்தைகளை பெற்றெடுக்க ஆர்வமின்றி உள்ளனர். முதலாளித்துவம் உருவாக்கும் சமூகப் பொருளாதார பாதுகாப்பின்மையே இதற்கும் மிக முக்கியக் காரணம்.

பெண்கள் 30 வயதிற்கு மேலும், திருமணம் செய்து கொள்ளாததால், குழந்தை பெற்றுக் கொள்ளாததால், அந்நாடுகளின் மக்கள் தொகை வீழ்ச்சி அடைகிறது. இது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதானல், பெண்களை திருமணம் செய்து கொள்ள, குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசுகளே ஊக்கப்படுத்துகின்றன. பெண்களின் சமூப் பொருளாதார கலாச்சார வாழ்வில் முற்போக்கான மாற்றங்களை செய்வதின் மூலம், இளம் வயது ( 18-21 வயது) திருமணங்களை அவர்களே தவிர்க்கும் நிலையை உருவாக்க முடியும்.

அதை விடுத்து சட்டரீதியாக திருமண வயதை உயர்த்துவது சரியல்ல. பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் ஹார்மோன்கள் தான் என்பது பெண்களை கொச்சைப் படுத்துவதாகும். அவர்களை இதை விட மோசமாக சிறுமைப்படுத்த முடியாது.
பெண்களுக்கு முடிவெடுக்கும் திறன் இல்லை. அதற்குக் காரணம் பெண்களின் ஹார்மோன்கள் என ஹார்மோன்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. பெண்களின் இளம் வயது திருமணம் ஒரு சமூகப் பொருளாதார பிரச்சனை. அவர்கள் படிப்பை நிறுத்துவதும் சமூகப் பொருளாதாரப்பிரச்னை.

"மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற பணப் பட்டுவாடா தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்ட முதலாளித்து வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது'' என்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகங்களை படிக்க வேண்டாமா?

எனவே, காதலில் மட்டும் இத்தகைய மோசடித்தனங்கள் நடக்கவில்லை. ஏற்பாட்டு திருமணங்களிலும் நடக்கிறது. சொத்துக்காக குடும்பங்களில் கொலைகள் நடப்பது குறையவில்லையே? இவற்றிற்கெல்லாம் காரணம் முதலாளித்துவ சமூக அமைப்பே ! இதை அறிய வேண்டாமா? அந்த அமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டாமா? உண்மையான அன்பும், காதலும் மிளிரும் சோசலிச சமூக அமைப்பையும், கலாச்சாரத்தையும், குடும்பங்களையும், வாழ்க்கை முறையையும் கட்டி எழுப்ப வேண்டாமா? சோசலிசம் தான் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு.

ஹார்மோன்களையும், காதலையும் காட்டி ,சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான போராட்டங்களிலிருந்து மக்களை திசை திருப்புதல் சரியல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக மத மற்றும் சாதி அடிப்படையில் மக்களை அணி திரட்டுவதற்காக பெண்களை பகடைக் காய்களாக மாற்றுவது சரியல்ல. முடிவெடுக்கத் தெரியாதவர்கள் என பெண்களை சிறுமை படுத்த வேண்டியதில்லை. அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பதை உணர வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திருமணம் செய்து கொள்பவர்கள் நிதிநிலைகளை எவ்வாறு கையாள வேண்டும்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.